மகளிர் டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியா
Published on

லண்டன்,

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப்போட்டிக்கு தகுதி

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா

இதே மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) இரவு 11 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com