மகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து

டார்சி கார்டர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72(52) ரன்கள் எடுத்தார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஸ்காட்லாந்து
Published on

லண்டன்,

மகளிர் டி20 உலகக் கோப்பையில் தற்போது நடந்து வரும் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஸ்காட்லாந்து.

டி20 உலகக் கோப்பை

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற நியூசிலாந்து

இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது.

டார்சி கார்டர் அரைசதம்

தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய டார்சி கார்டர் மற்றும் கேத்ரின் பிரேசர் ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் அளித்தது. ஆனால் கேத்ரின் பிரேசர் 17 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் கேத்ரின் பிரைஸ் 7 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து டார்சி கார்டருடன் சாரா பிரைஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய சாரா பிரைஸ் 22 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அல்சா லிஸ்டர் 2 ரன்களிலும், மேகன் மெக்கோல் ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

132 ரன்கள் வெற்றி இலக்கு

மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய டார்சி கார்டர் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. டார்சி கார்டர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72(52) ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com