பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்
Published on

மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.

இந்த போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெறுகிறது. அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது. இதனால் இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com