ஐ.எஸ்.எல் கால்பந்து - வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை?... டெல்லி அணியுடன் இன்று மோதல்

கடந்த இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியுள்ள சென்னை அணிக்கு இது மிக முக்கியமான போட்டியாகும்.
ஐ.எஸ்.எல் கால்பந்து - வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை?... டெல்லி அணியுடன் இன்று மோதல்
Published on

சென்னை,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 14 அணிகள் பங்கேற்கும் 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற நிலையில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி வருகின்றன.

இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சென்னையின் எப்.சி, ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

Also Read
ஐ.எஸ்.எல்.கால்பந்து: பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம் டிரா
ஐ.எஸ்.எல் கால்பந்து - வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை?... டெல்லி அணியுடன் இன்று மோதல்

அணிகளின் தற்போதைய நிலவரம்:

சென்னையின் எப்.சி: இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றி, 2 டிரா, 4 தோல்விகளுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி: இதுவரை விளையாடிய ஆட்டங்களில் 2 வெற்றி, 2 டிரா, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியுள்ள சென்னை அணிக்கு இது மிக முக்கியமான போட்டியாகும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் புதிய வியூகங்களை வகுத்து களம் இறங்கும் சென்னை அணி, இன்றைய போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com