மீண்டும் கால்பந்து உலக கோப்பையில் களமிறங்கும் ரொனால்டோ... இந்த முறை கோப்பையை கைப்பற்றுவாரா?

உலகக் கோப்பை வரலாற்றில் 6 முறை பங்கேற்கும் முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைக்கவுள்ளார்.
மீண்டும் கால்பந்து உலக கோப்பையில் களமிறங்கும் ரொனால்டோ... இந்த முறை கோப்பையை கைப்பற்றுவாரா?
Published on

லிஸ்பன்,

கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு முற்ருப்புள்ளி வைக்கும் விதமாக, வரவிருக்கும் 2026 பிபா (FIFA) உலகக் கோப்பை தொடருக்கான போர்ச்சுகல் அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை 41 வயதான நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வழிநடத்தவுள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 6 முறை பங்கேற்கும் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைக்கவுள்ளார்.

முன்னணி பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்டினெஸ் வெளியிட்டுள்ள இந்த 27 பேர் கொண்ட போர்ச்சுகல் அணியில், ரொனால்டோவுடன் இணைந்து புருனோ பெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வா போன்ற அனுபவ வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை தொடராக இது கருதப்படுகிறது. 2016-ல் ஐரோப்பிய கோப்பையை (Euro Cup) வென்ற போர்ச்சுகல் அணிக்கு, உலகக் கோப்பை என்பது இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

Also Read
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் - குஜராத் டைட்டன்ஸின் 7 வீரர்களுக்கு இந்திய அணியில் இடம்
மீண்டும் கால்பந்து உலக கோப்பையில் களமிறங்கும் ரொனால்டோ... இந்த முறை கோப்பையை கைப்பற்றுவாரா?

கடந்த கால உலகக் கோப்பை தொடர்களில் போர்ச்சுகல் அணியின் தரவரிசைப் பட்டியல்:

2006: 4-வது இடம் (ரொனால்டோவின் முதல் உலகக் கோப்பை)

2010: 11-வது இடம்

2014: 18-வது இடம்

2018: 13-வது இடம்

2022: 8-வது இடம் (குவாட்டர் பைனலில் மொராக்கோவிடம் அதிர்ச்சி தோல்வி)

தற்போது போர்ச்சுகல் அணி இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் பலமாக காட்சியளிக்கிறது. கடந்த 2006 முதல் 2026 வரை இரண்டு தசாப்தங்களாக உலகக் கோப்பை மேடையில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ள ரொனால்டோ, இந்த முறை எப்படியாவது கோப்பையைத் தன்வசப்படுத்த வேண்டும் என்ற தீவிர முனைப்பில் உள்ளார்.

ரொனால்டோவின் இந்த 6-வது உலகக் கோப்பை பயணம், அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த விளையாட்டு உலகிற்கும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான தொடராக அமையப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com