ஐ.எஸ்.எல். கால்பந்து; ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்திய மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ்

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
Image Courtesy: @IndSuperLeague
Image Courtesy: @IndSuperLeague
Published on

மும்பை,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி - மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் மோகன் பகான் அணி சிறப்பாக செயல்பட்டு மேலும் ஒரு கோல் அடித்தது.

ஈஸ்ட் பெங்கால் வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதி வரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்காலை 2-0 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com