ஐ.எஸ்.எல். கால்பந்து; ஈஸ்ட் பெங்காலை வீழ்த்திய ஒடிசா எப்.சி


ஐ.எஸ்.எல். கால்பந்து; ஈஸ்ட் பெங்காலை வீழ்த்திய ஒடிசா எப்.சி
x

Image Courtesy: @IndSuperLeague

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஒடிசா,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று ஒடிசாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஒடிசா அணியினர் மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினர்.

ஆனால், மறுபுறம் ஈஸ்ட் பெங்கால் அணியினர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஒடிசா எப்.சி வெற்றி பெற்றது.

1 More update

Next Story