ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பை சிட்டி - ஒடிசா எப்.சி அணிகள் இன்று மோதல்

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மும்பை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி - ஒடிசா எப்.சி அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மும்பை 20 ஆட்டங்களில் ஆடி 13 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி கண்டு 44 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில் 20 ஆட்டங்களில் ஆடியுள்ள ஒடிசா 11 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி கண்டு 39 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ள இரு அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com