

சிட்னி,
39 வயதான மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வருகிறார். அவரது தலைமையிலான அர்ஜெண்டினா அணி, ஃபிபா கால்பந்து தொடரில் 2022-ல் சாம்பியன் பட்டமும், 2014 மற்றும் 2026-ல் இரண்டாம் இடமும் பிடித்தது. தன் தாயகத்துக்காக 125 கோல்களை மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
இந்தநிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
6 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று 2014, 2022, 2026 என 3 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். 2022ல் கால்பந்து உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக விளையாடி சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தார். 2 முறை உலகக்கோப்பை சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
இந்தநிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
பலமுறை ஆழமாக சிந்தித்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். கால்பந்து வாய்ப்புகாக பல தகுதியான, திறமையான இளம் வீரர்கள் பலர் காத்திருக்கின்றனர் என லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார்.
ஓய்வு முடிவு எனது உள்ளத்தை மிகவும் காயப்படுத்துகிறது. எனினும் இதுவே சரியான தருணம் காலப்போக்கில் சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரும். அப்படி எனது இந்த அத்தியாயம் முடிவுக்கு வருகிறது என சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உருக்கமாக கூறியுள்ளார்.