

கொச்சி,
கேரளாவை சேர்ந்த தீவிர கால்பந்து ரசிகர் ஒருவர், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்சியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவுக்கு, மெஸ்சியே நேரடியாக பதிலளித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த 24-ம் தேதி தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடிய லியோனல் மெஸ்சிக்காக, கேரள ரசிகர் ஒருவர் சிறப்பு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், அவர் மெஸ்சியின் பிரமாண்ட சுவர் ஓவியத்தின் முன் நின்று, ஸ்பானிஷ் மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த வீடியோவை பார்த்த மெஸ்சி 'லைக்' செய்ததுடன், நன்றி ("¡Gracias Yadil!" ) என்று ஸ்பானிஷ் மொழியில் கமெண்ட் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மெஸ்சியின் இந்த செயல் கேரளா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.