ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல்கள் மெஸ்ஸி புதிய சாதனை!

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

தற்போதைய கால்பந்து உலகில் தலைசிறந்த வீரர்களாக மெஸ்ஸியும், ரொனால்டோவும் உள்ளனர். இவர்களுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இருவரில் யாராவது ஒருவர் குறிப்பிட்ட சாதனையை படைக்கும் போது அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்ப்பார்கள்.

இந்த சூழலில், ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 701 கோல் அடித்திருந்தார்.

இந்த நிலையில் மெஸ்ஸி 702 கோல்கள் அடித்து ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், ரொனால்டோவை விட 105 போட்டிகள் குறைவாக விளையாடி அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com