மெஸ்சியின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

மெஸ்சி ஆட்டம் முடிந்ததும் தனது மிகவும் எமோஷனலாக பேசினார்.
மெஸ்சியின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
Published on

கான்சாஸ் சிட்டி,

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்த அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி ஆட்டம் முடிந்ததும் தனது மிகவும் எமோஷனலாக பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

'நான் சில கடினமான நாட்களை கடந்து வந்தேன். அது கால்பந்து தொடர்பானது கிடையாது. அதனை நினைத்ததால் தான் கண்ணீர் வந்தது' என்றார். இதற்கிடையே அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்சி உடல் நிலை குறித்து பரபரப்பான தகவல் பரவியது.

'

இந்த நிலையில் மெஸ்சி கண்ணீர் சிந்தியதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்சி (வயது 68) உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதை மெஸ்சியின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

ஆனால் அவருக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com