பிரீமியர் லீக் - கோல் மழை பொழிந்த லிவர்பூல்... மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி

யுனைடெட் அணி 10 வீரர்களுடன் விளையாடியது.
மான்செஸ்டர் யுனைடெட்
Published on: 

மான்செஸ்டர்,

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் போட்டியிலேயே, லிவர்பூல் அணியிடம் 4-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.

சிவப்பு அட்டை

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஆன்பீல்டில் நடைபெற்ற போட்டியில் லிவர்பூல் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. இப்போட்டியில் 8-வது நிமிடத்திலேயே லெனி யோரோ சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் யுனைடெட் அணி 10 வீரர்களுடன் விளையாடியது.

இதனை பயன்படுத்திக் கொண்ட லிவர்பூல் அணியின் டொமினிக் ஸ்சோபோஸ்லாய் தொடக்க கோலை அடித்தார். தொடர்ந்து 3 நிமிடங்களில் ப்ளோரியன் விர்ட்ஸ் 2-வது கோலை அடித்து அணியின் முன்னிலையை அதிகரித்தார்.

லிவர்பூல் ஆதிக்கம்

2-வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணிக்காக ரியோ என்குமோஹா 3-வது கோலை அடித்தார். ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்களுக்கு முன்பு விக்டர் முனோஸ் 4-வது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

அடுத்த போட்டி

இதனால் புதிய பயிற்சியாளரின் கீழ் முதல் போட்டியிலேயே மான்செஸ்டர் யுனைடெட் அணி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக யுனைடெட் அணி ஸ்போர்ட்டிங் அணியை எதிர்கொள்ள உள்ளது.

X