சவுதி புரோ லீக்: பெனால்டியை தவறவிட்ட ரொனால்டோ... அல் நாசரை வீழ்த்திய அல் அஹ்லி

இறுதிவரை முன்னிலையை அல் அஹ்லி அணி தக்கவைத்து வெற்றி பெற்றது.
ரொனால்டோ
Published on: 

ஜித்தா,

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில், அல் நாசர் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி அல் அஹ்லி அணி அபார வெற்றி பெற்றது.

ரொனால்டோ கோல்

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் அல் நாசர் - அல் அஹ்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சாமு கோஸ்டாவின் பாஸை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அல் நாசர் அணியை முன்னிலை பெற செய்தார்.

இதையடுத்து 18-வது நிமிடத்தில் அல் நாசர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரொனால்டோ அடித்த பெனால்டி கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இதையடுத்து முதல் பாதியின் கூடுதல் நேரமான 45+1-வது நிமிடத்தில் கலேனோ கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

அல் அஹ்லி ஆதிக்கம்

இதையடுத்து நடந்த 2-வது பாதியில், ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இவான் டோனி கோலாக மாற்றி அல் அஹ்லி அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

அடுத்த 4 நிமிடங்களில், 75-வது நிமிடத்தில் ரோஜர் இபானெஸ் கோல் அடிக்க, அல் அஹ்லி அணி 3-1 என முன்னிலை பெற்றது. இதையடுத்து கோல் அடிக்க அல் நாசர் அணி கடுமையாக போராடியது. இருப்பினும், இறுதிவரை இந்த முன்னிலையை அல் அஹ்லி அணி தக்கவைத்து வெற்றி பெற்றது.

X