பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் செனகல் முன்னிலை

போட்டியின் 24-வது நிமிடத்தில் செனகல் அணியின் வீரர் ஹபீப் டையர்ரா முதல் கோலை போட்டார்.
பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் செனகல் முன்னிலை
Published on

சியாட்டில்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் செனகல் முன்னிலை பெற்றுள்ளது.

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் மற்றும் செனகல் அணிகள் விளையாடின.

செனகல் முன்னிலை

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் சியாட்டில் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 24-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது. செனகல் அணியின் வீரர் ஹபீப் டையர்ரா முதல் கோலை போட்டார்.

எனினும், அதன்பின்னர் இரு அணிகளின் தரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என செனகல் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் எந்த அணிக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com