டிரம்ப் தலையிட்டதால் அமெரிக்க வீரருக்கு சலுகையா? 'பிபா' முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப். சர்வ தேச கால்பந்து சம்மேளன தலைவர் (பிபா) இன்பான்டினோவை அழைத்து பேசி, பலோகனுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டை முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
 டிரம்ப் தலையிட்டதால் அமெரிக்க வீரருக்கு சலுகையா? 'பிபா' முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
Published on

சியாட்டில்,

உலகக் கோப்பை கால்பந்தில் போஸ்னியாவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தின் போது அமெ ரிக்க வீரர் போலரின் பலோகன் சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளாகி பாதியில் வெளியேற்றப்பட் டார். விதிமுறைப்படி சிவப்பு அட்டை பெறும் வீர ருக்கு அடுத்த ஆட்டத்தில் விளையாட தடை உண்டு. இதனால் பெல்ஜியத்துக்கு எதிரான இன்றைய 3-வது சுற்றில் அவரால் விளையாட முடியாத நிலைமை காணப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப். சர்வ தேச கால்பந்து சம்மேளன தலைவர் (பிபா) இன்பான்டினோவை அழைத்து பேசி, பலோகனுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டை முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டார். இந்த முடிவை மோசமானது என்றும் வாதித்தார். அவரது நெருக்கடியை தொடர்ந்து சிவப்பு அட்டை நடவடிக் கையை 'பிபா' நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் பலோகன் இன்றைய ஆட்டத்தில் களம் கண்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, இது தவறான முன்னு தாரணமாகி விடும் என சாடியுள்ளது. முன்எப்போதும் இல்லாத, புரிந்து கொள்ள முடியாத நியாயப்படுத்த முடியாத ஒரு முடிவை 'பிபா' எடுத்திருப் பதாக விமர்சித்துள்ளது. பெல்ஜியம் அணியும் தனது எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com