பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி வாழ்க்கையிலேயே முக்கியமான போட்டி: லாமின் யமால்

அரையிறுதியில் பிரான்ஸ், ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி வாழ்க்கையிலேயே முக்கியமான போட்டி: லாமின் யமால்
Published on

டல்லாஸ்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இறுதிகட் டத்தை எட்டி விட்ட இந்த கால்பந்து திருவிழாவில் இன்னும் 3 ஆட்டங்களில் புதிய உலக சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும்.

டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரையிறுதியில் 2 முறை சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான பிரான்ஸ், 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி தொடர்பாக ஸ்பெயின் வீரர் லாமின் யமால் கூறும்போது,

நாளை பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டி எனது விளையாட்டு வாழ்க்கையிலேயே மிக முக்கியமான போட்டியாகும். என்னை ஒரு உலகக் கோப்பை வெற்றியாளராகக் காண விரும்புகிறேன். நான் ஐந்து கோல்களை அடிக்காதது பயிற்சியாளரின் தவறு அல்ல. கால்பந்தில் இவையெல்லாம் நடக்கக் கூடியவைதான்.அவை எனக்கு எந்தக் கவலையையும் தருவதில்லை.என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com