உலக கோப்பை கால்பந்து: கோல் மழை பொழிந்த ஸ்பெயின்.. கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி

ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Image Tweeted By FIFAWorldCup
Image Tweeted By FIFAWorldCup
Published on

தோகா,

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று 'எப்' பிரிவில் நடந்த முதல் போட்டியில் மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதின. இந்த போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் 'டிரா'-வில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணியை வீழ்த்தி ஜப்பான் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற 3-வது போட்டியில் ஸ்பெயின் - கோஸ்டா ரிக்கா (இ பிரிவு) அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணியின் முன்கள வீரர்கள் கோல் மழைகளை பொழிந்தனர். முதல் பாதியில் டானி ஓல்மோ (11-வது நிமிடம்), மார்கோ அசென்சியோ (21-வது நிமிடம்) பெரான் டோரஸ் (31-வது நிமிடம்) ஆகியோரின் கோலால் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் கோஸ்டா ரிக்கா அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. அதை நேரத்தில் ஸ்பெயின் அணி வீரர்கள் தொடந்து கோல்கள் அடித்தனர். 2-வது பாதியில் பெரான் டோரஸ் (54-வது நிமிடம்), ஹாவி (74-வது நிமிடம்), கார்லோஸ் (90-வது நிமிடம்), அல்வரோ (92-வது நிமிடம்) கோல் அடித்தனர். இறுதியில் ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com