

லாஸ் ஏஞ்சல்ஸ்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் ஸ்பெயின் முன்னிலை பெற்றுள்ளது.
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா அணிகள் விளையாடின.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 36-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது. ஸ்பெயின் அணியின் வீரர் மிகெல் ஒயார்ஜபால் முதல் கோலை போட்டார்.
எனினும், அதன்பின்னர் இரு அணிகளின் தரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என ஸ்பெயின் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் முதல் பாதியில் எந்த அணிக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்படவில்லை.