எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி: நியூசிலாந்து அணியை துவம்சம் செய்தது இந்திய அணி

இந்திய அணி 7-4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Image Tweeted By @TheHockeyIndia
Image Tweeted By @TheHockeyIndia
Published on

புவனேஸ்வர்,

எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி 2022-2023ன் சீசன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி முதல் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ஸ்பெயின் அணியிடம் இந்திய அணி வீழ்ந்தது

இந்த நிலையில் இன்று நடந்த போட்டியில் இந்திய அணி மீண்டும் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர்கள் கோல் மழைகளை பொழிந்தனர். இதனால் இந்திய அணி 7-4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் (6-வது மற்றும் 18-வது நிமிடம்), கார்த்தி (16வது நிமிடம்), ராஜ் குமார் பால், சுக்ஜீத் சிங் (49-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (52-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இந்த தொடரில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஸ்பெயின் அணியை நவம்பர் 6-ல் எதிர்கொள்கிறது. ஸ்பெயின் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் அந்த அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் களமிறங்குவார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com