

ஆம்ஸ்டல்வீன்,
2026 ஆண்கள் ஆக்கி உலகக்கோப்பை தொடரின் ‘டி’ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (ஆகஸ்ட் 19) வாழ்வா, சாவா போட்டியில் மோதுகின்றன.
இந்தியா தனது முதல் போட்டியில் வேல்ஸை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆனால், அடுத்த போட்டியில் இங்கிலாந்திடம் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் இந்தியா 2 போட்டிகளில் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டிரா செய்தாலே இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 1-4 என தோல்வியடைந்தது. பின்னர் வேல்ஸுக்கு எதிரான போட்டியை டிரா செய்தது.
இதனால் பாகிஸ்தான் தற்போது 1 புள்ளியுடன் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இந்தியாவை கட்டாயம் வீழ்த்த வேண்டும்.
இந்தியா - பாகிஸ்தான் ஆக்கி போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கடந்த சுமார் 10 ஆண்டுகளாக பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியதில்லை.
‘டி’ பிரிவில் இங்கிலாந்து தனது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் மோதல் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
தேதி: ஆகஸ்ட் 19, 2026
போட்டி: இந்தியா vs பாகிஸ்தான்
இடம்: வேகனர் ஸ்டேடியம், ஆம்ஸ்டல்வீன், நெதர்லாந்து
நேரம்: மாலை 6.30 மணி (இந்திய நேரம்)