

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கிப் போட்டி சீனாவின் மோகி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதலாவது காலிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கோல் மழை பொழிந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா 19-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக பூஜா மாலிக் 3 கோலும், ரோஷினி, சானிகா மானே, மது சிதார், சுப்ரியா தலா 2 கோலும் அடித்தனர். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரியாவுடன் மோதுகிறது.