சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ்: அரையிறுதிக்கு முன்னேறி அனஹத் சிங் சாதனை

சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது.
அனஹத் சிங்
Published on: 

ரெட்வுட் சிட்டி,

சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடரில், இந்தியாவின் இளம் வீராங்கனை அனஹத் சிங் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

42 நிமிடங்கள் நீடித்த ஆட்டம்

சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள அனஹத் சிங், 14-வது இடத்தில் உள்ள சல்மா ஹனியை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 4-11 என்ற கணக்கில் இழந்த அனஹத், இரண்டாவது செட்டில் 11-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார். மூன்றாவது செட்டை 4-11 என்ற கணக்கில் இழந்தாலும், அடுத்த இரண்டு செட்களையும் 11-2, 11-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அரையிறுதி

இதன் மூலம் 42 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் பி.எஸ்.ஏ. சுற்றுப்பயணத்தின் தங்க நிலைத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையை அனஹத் சிங் பெற்றுள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com