குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... நரேந்தர் பெர்வால் அசத்தல்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
குத்துச்சண்டை
Published on: 

டோக்கியோ,

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் நரேந்தர் பெர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அரையிறுதியில் தோல்வி

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான +90 கிலோ பிரிவு அரையிறுதிப் போட்டியில், நடப்பு உலக சாம்பியனான கஜகஸ்தானின் ஐபெக் ஒரல்பாயை நரேந்தர் பெர்வால் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நரேந்தர் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

மற்றொரு சாதனை

31 வயதான நரேந்தர் பெர்வால், இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் பதக்கம் வென்று, தனது சர்வதேசப் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தைச் சேர்த்துள்ளார்.

இறுதிப்போட்டி

மேலும், ஆண்களுக்கான 80 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அங்குஷ் பங்கால் உஸ்பெகிஸ்தானின் பஸ்லிடின் எர்கின்போயேவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் கிம் மின்-சாங்கை அங்குஷ் பங்கால் எதிர்கொள்கிறார்.

பர்வீன் ஹூடா

பெண்களுக்கான 65 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, சீனாவின் லி ஷூவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் சைனீஸ் தைபேவின் சென் நியென்-சினை அவர் எதிர்கொள்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com