ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்

ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

நகோயா,

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திர வீராங்கனை அனாஹத் சிங், ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16-வது சுற்றில் அனாஹத் சிங், சிங்கப்பூரின் ஆவ் யோங் வை இயன்னை எதிர்கொண்டார். இதில் அனாஹத் சிங் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 11-4, 11-5, 11-7 என்ற நேர் ஆட்டக்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான தன்வி கண்ணா சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com