குகேஷுக்கு எதிராக தோல்வி... கோபத்தில் மேஜையில் ஓங்கி குத்திய கார்ல்சென்

நார்வே செஸ் தொடரில் இன்று நடைபெற்ற 6வது சுற்றி ஆட்டத்தில் கார்ல்செனை குகேஷ் வீழ்த்தினார்.
image courtesy:twitter
image courtesy:twitter
Published on

ஸ்டாவஞ்சர்,

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அர்ஜூன் எரிகைசி (இந்தியா) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்

இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் இன்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார்.

இந்த தொடரில் இரு வீரர்களும் மோதிய முதல் ஆட்டத்தில் கார்ல்சென் வெற்றிபெற்றிருந்தார். இதனால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குகேஷ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கார்ல்செனுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இந்த தோல்வியினால் கோபமடைந்த கார்ல்சென் மேஜையில் ஓங்கி குத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வெற்றியின் மூலம் நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் புள்ளி பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் குகேஷ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேவேளை, 9.5 புள்ளிகளுடன் கார்ல்சன் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com