சேலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் ‘சாம்பியன்’

எகிப்தின் ஹஸ்சன் மென்ஹாவியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சேலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் ‘சாம்பியன்’
Published on: 

புதுடெல்லி,

புரபொசனல் ஸ்குவாஷ் சங்கம் சார்பில் சேலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது.

இந்திய வீரர்

இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 173-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் அயான் வஜி ரல்லி சரிவில் இருந்து மீண்டு வந்து 7-11, 11-7, 11-9, 11-2 என்ற செட் கணக்கில் 216-வது இடத்தில் உள்ள எகிப்தின் ஹஸ்சன் மென்ஹாவியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மும்பையை சேர்ந்த 20 வயதான அயான், புர பொசனல் ஸ்குவாஷ் சங்க டூர் தொடரில் வென்ற முதல் பட்டம் இதுவாகும்.

X