காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டி: இந்தியாவின் பிரீதி பவார் காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் பிரீதி பவார் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பிரீதி பவார்
Published on

கிளாஸ்கோ,

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 54 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பிரீதி பவார் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

முதல் சுற்றிலேயே ஆதிக்கம்

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரீதி பவார், மலாவியின் டெபோரா மதேஞ்சேவை எதிர்கொண்டார். போட்டியின் முதல் சுற்றிலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அபார வெற்றி

இரண்டாவது சுற்றிலும் பிரீதி தொடர்ந்து ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால், போட்டி ஒருதலைப்பட்சமாக மாறியது. இதையடுத்து, வீராங்கனையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடுவர் போட்டியை பாதியிலேயே நிறுத்தி (RSC - Referee Stops Contest), பிரீதி பவாரை வெற்றியாளராக அறிவித்தார்.

காலிறுதி

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய பிரீதி பவார், அடுத்த சுற்றில் வட அயர்லாந்தின் நிகோல் க்ளைடை எதிர்கொள்ள உள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்றால் பதக்கம் உறுதியாகிவிடும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com