ஸ்குவாஷ் வீரர் - வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.
ஸ்குவாஷ் வீரர் - வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி
Published on

சென்னை,

ஜப்பானில் 19-ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த 36 வீரர்- வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் சிறப்பு நிதியுதவியாக மொத்தம் ரூ.2.52 கோடி வழங்கப்படுகிறது. இதன்படி ஸ்குவாஷ் வீரர் வேலவன் செந்தில்குமார், வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னப்பா, ஷமினா ரியாஸ் ஆகியோருக்கு தலா ரூ.7 லட்சத்துக்கான காசோலையை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, எஸ்.டி.ஏ.டி. பொதுமேலாளர் சுஜாதா, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் முகமது ரியாஸ் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com