ஸ்பெயின் பார்முலா1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் முதலிடம்

ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்முலா1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
ஸ்பெயின் பார்முலா1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் முதலிடம்
Published on

பார்சிலோனா,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்சிலோனாவில் நேற்று நடந்தது.

308.424 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) எதிர்பார்த்தது போலவே முதலாவது வந்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார்.

அவர் பந்தய தூரத்தை 1 மணி 33 நிமிடங்கள் 07.680 வினாடிகளில் எட்டி வெற்றி கண்டார். அவரை விட 15.841 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்) 3-வது இடத்தை பிடித்தார்.

இந்த சீசனில் 3-வது வெற்றியை ருசித்த ஹாமில்டன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் மொத்தம் 94 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெர்ஸ்டப்பென் 80 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். 5-வது சுற்று போட்டி வருகிற 23-ந்தேதி மொனாக்கோவில்நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com