இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் தேர்தலில் விலகிய பி.டி.உஷா

ஐஸ் ஆக்கி சம்மேளனத்தின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்திய ஒலிம்பிக் சங்க  தலைவர் தேர்தலில் விலகிய பி.டி.உஷா
Published on: 

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.) புதிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி நடக்கிறது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். நடப்பு தலைவரும், முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனையு மான பி.டி.உஷா மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் ஒரு அங்க மாக ஏற்கனவே நடந்த சிறப்பு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான தேர்தலில் தோல்வி அடைந்த பி.டி. உஷா. அடுத்த கட்டமாக ஐஸ் ஆக்கி சம்மேளன பிரதிநிதியாக தலைவர் பதவிக்கு போட்டியிட முயற்சி மேற்கொண்டார். இதற்கு ஐஸ் ஆக்கி சம்மேளனத்தின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேட்பு மனு தாக்கல்

இந்த நிலையில் தற்போது அவர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யாமல் போட்டியில் இருந்து திடீரென ஒதுங்கி விட்டார். ஐ.ஓ.ஏ. தலைவர் பதவிக்கு போட்டியிட நடப்பு துணைத்தலைவரும், லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்றவருமான ககன் நரங், முன்னாள் பொதுச்செயலாளரும், இந்திய வாள்வீச்சு சம்மேளன செயலா ளருமான ராஜீவ் மேத்தா, இந்திய வில்வித்தை செயலாளர் வீரேந்தர் சச்தேவா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய் துள்ளனர். இதனால் மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற டிசம்பர் 2-ந் தேதி கடைசி நாளாகும்.

X