நார்வே செஸ்: உலக சாம்பியன் குகேஷ் 2-வது வெற்றி

குகேஷ் 4-வது சுற்று ஆட்டத்தில் பாபியானோ கருனா உடன் மோதினார்.
image courtesy:twitter/@NorwayChess
image courtesy:twitter/@NorwayChess
Published on

ஸ்டாவஞ்சர்,

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

இதில் தனது முதல் 2 சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்த குகேஷ் 3-வது சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை தோற்கடித்து வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.

இதனையடுத்து குகேஷ் 4-வது சுற்றில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான பாபியானோ கருனா உடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் குகேஷ் விளையாடினார். இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் ஆட்டம் டிரா ஆனது. அதன் பிறகு வெற்றியாளரை தீர்மானிக்க அர்மகெதோன் டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குகேஷ் வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் குகேஷ் தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

4-வது சுற்று முடிவில் கார்ல்சென் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாபியானோ கருனா 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹிகாரு நகமுரா 5.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 4.5 புள்ளிகளுடன் அடுத்த 2 இடங்களிலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com