பாகிஸ்தானில் நடைபெறாது... ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைப்பு

இந்த போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தானில் நடைபெறாது... ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைப்பு
Published on

கராச்சி,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த நேரத்தில் போட்டியை நடத்த இயலாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இணைந்த புதிய அணி
பாகிஸ்தானில் நடைபெறாது... ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி தள்ளிவைப்பு

இதனால், போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஸ்குவாஷ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. மேலும், நிலைமை சீராகிய பின்னர் இந்த போட்டியை செப்டம்பர் மாதத்தில் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com