

அல்மேதி
அல்மேதி ஓபன் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
கஜகஸ்தான் நாட்டின் அல்மேதி நகரில் நடந்த அல்மேதி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் முன்னணி வீரரான டேனில் மெத்வதேவ் மற்றும் நிகோலஸ் பசிலாஸ்விலி ஆகியோர் விளையாடினர்.
இதில், 6-7(6) 6-1 6-3 என்ற செட் கணக்கில் நிகோலசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளில் அவருடைய 4-வது பட்டம் இதுவாகும்.
அடுத்து இன்று தொடங்கவுள்ள வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் மெத்வதேவ் விளையாட உள்ளார்.