பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.’
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

பார்சிலோனா,

களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட் அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் எட்செவரியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஸ்பர் ரூட் 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் தாமஸ் மார்ட்டின் எட்செவரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கிரேக்க டென்னிஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் செர்பியாவி டுசான் லாஜோவிக்கை எதிர்கொள்ள உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com