பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

மேட்ரிட்,

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கேஸ்பர் ரூட் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மேட்டியோ அர்னால்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் கேஸ்பர் ரூட் அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோத உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com