கனடா ஓபன் டென்னிஸ்; ஜானிக் சின்னர் சாம்பியன்

கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

டொரண்டோ,

கனடா ஓபன் சர்வதேச டென்னில் போட்டி அங்குள்ள டொரண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடைபெற்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இந்தப் போட்டியில் ஜானிக் சின்னர் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com