சீன ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்

6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லெர்னெர் தியானை எளிதில் வீழ்த்தினார்.
சீன ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னர்
Published on

பீஜிங்,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லெர்னெர் தியான் உடன் மோதினார்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சின்னர், 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் லெர்னெர் தியானை எளிதில் வீழ்த்தினார். இதன் மூலம் சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் சின்னர் 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com