சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கேட்டி மெக்னாலி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.. அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் நூற்றாண்டு கால பழமைவாய்ந்த இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்றுள்ளார்கள்.

இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கேட்டி மெக்னாலி - ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்கிலிஸ் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய கேட்டி மெக்னாலி 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மேடிசன் இங்கிலிஸை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com