சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றது ராஜீவ் ராம் ஜோடி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்- குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடி, இத்தாலியின் லாரன்சோ முசெட்டி-லாரன்சோ சொனேகோ ஜோடியுடன் மோதியது.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக செயல்பட்ட ராஜீவ் ராம் ஜோடி 4-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் லாரன்சோ முசெட்டி-லாரன்சோ சொனேகோ ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com