சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சபலெங்கா, கார்சியா அரையிறுதிக்கு தகுதி..!

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஜெசிகா பெகுலா, கரோலின் கார்சியாவுடன் மோதினார்.
image courtesy: Western & Southern Open twitter
image courtesy: Western & Southern Open twitter
Published on

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, பிரான்சின் கரோலின் கார்சியாவுடன் மோதினார்.

இந்த போட்டியில் கரோலின் கார்சியா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா சீனாவின் ஷாங் சூவாயுடன் மோதினார். இந்த போட்டியில் சபலெங்கா 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் ஷாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com