இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரேவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அல்காரஸ்

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கலிபோர்னியா,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6ம் இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

அரையிறுதிக்கு முன்னேற இரு வீரர்களும் கடுமையாக போராடுவர் அதனால் ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் அல்காரஸ் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள இத்தாலியின் ஜன்னிக் சின்னெருடன் மோத உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com