இத்தாலி ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ரோம்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரினா சபலென்கா 6-1, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் மார்டா கோஸ்ட்யுக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் சபலென்கா சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதுகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com