இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அதிர்ச்சி தோல்வி

இவர் 3-வது சுற்று ஆட்டத்தில் டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ரோம்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் (போலந்து), டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டேனியல் காலின்ஸ் 6-1 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தோல்வி அடைந்த இகா ஸ்வியாடெக் தொடரிலிருந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com