இத்தாலி ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறினார் டாமி பால்

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஹர்காக்ஸ், ஆட்டத்தின் 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 3-6 என்ற புள்ளிக்கணக்கில் ஹூபர்ட் ஹர்காக்ஸ் தோல்வி கண்டார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் ஹர்காக்ஸ் 5-7, 6-3, 3-6 என்ற புள்ளிக்கணக்கில் டாமி பாலிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் டாமி பால் சிலியின் நிக்கோலஸ் ஜாரியை எதிர்கொள்ள உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com