இத்தாலி ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனை மேடிசன் கீஸ் அதிர்ச்சி தோல்வி

image courtesy:twitter/@InteBNLdItalia
கீஸ் 3-வது சுற்றில் பெய்டன் ஸ்டெர்ன்ஸ் உடன் மோதினார்.
ரோம்,
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா), சக நாட்டவரான பெய்டன் ஸ்டெர்ன்ஸ் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற 3-வது செட்டை பெய்டன் ஸ்டெர்ன்ஸ் கைப்பற்றி கீசுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பெய்டன் ஸ்டெர்ன்ஸ் இந்த ஆட்டத்தில் 2-6, 6-2 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். அதிர்ச்சி தோல்வி கண்ட மேடிசன் கீஸ் வெளியேறினார்.
Related Tags :
Next Story