இத்தாலி ஓபன் டென்னிஸ்; சிட்சிபாஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் கிரேக்க டென்னிஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அமெரிக்காவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட சிட்சிபாஸ் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் சிட்சிபாஸ் சிலி வீரரான நிக்கோலஸ் ஜாரியை எதிர்கொள்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com