இத்தாலி ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கோகோ காப்-பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com