

ரோம்,
இத்தாலி டென்னிஸ் நட்சத்திரமும் உலகின் நம்பர் 1 வீரருமான ஜானிக் சின்னர், முழங்கால் காயம் காரணமாக 2026ஆம் ஆண்டின் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகியுள்ளார்
காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி எஞ்சிய சீசனில் இருந்து சினெர் விலகியுள்ளார். இனி 2027-ம் ஆண்டில் தான் விளையாடுவார்.
ஜூலை மாதம் விம்பிள்டன் பட்டத்தை வென்ற பிறகு சின்னர் எந்த அதிகாரப்பூர்வ போட்டியிலும் விளையாடவில்லை. தற்போது 2027 சீசனுக்குத் தயாராகும் வகையில் முழுமையாக குணமடைவதே தனது முக்கிய நோக்கம் என அவர் கூறியுள்ளார்.