மியாமி ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெட்விடேவ் அரையிறுதியில் மற்றொரு முன்னணி வீரரான ஜானிக் சின்னர் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான டேனில் மெட்விடேவ் ( ரஷ்யா), நிக்கோலஸ் ஜாரி (சிலி) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெட்விடேவ் 6-2 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஜாரியை எளிதில் வீழ்த்திய அவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

மெட்விடேவ் அரையிறுதியில் மற்றொரு முன்னணி வீரரான ஜானிக் சின்னர் ( இத்தாலி) உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com